பசும்பொன் தேவர் குரல் முதன்மைச் செய்திகள்:


★ இணையமலர் தமிழ் No 1 இணையதள நாளிதழ் | தமிழக அரசியல்| கல்வி மலர் | மாவட்டம் | சினிமா மலர் | விவசாயமலர் | இந்தியா| பொது | போட்டோ | கார்ட்டூன்ஸ் |புத்தக மதிப்புரை |உலக தமிழர் செய்திகள் | கலை மலர் | சிறப்பு மலர்| விளையாட்டு மலர் |ஆன்மிக மலர் | உலகம்★

காலச்சுவடு


மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருகிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்போது பாரதியார் புதுச்சேரியில் வசித்து வந்தார்.

பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும் சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த வீட்டில் இருந்த போது பாரதியார் அடிக்கடி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று வருவார். ஒருமுறை கோயிலில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாரதி இறந்தார்.

பாரதியாரின் இறப்புக்கு பிறகு இந்த வீடு பலரது கைக்கு மாறியது. வீட்டின் அமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பின்னர் இந்த வீட்டை தமிழக அரசு வாங்கியது. பாரதியின் நினைவாக இந்த வீட்டை அருங்காட்சியமாக தமிழக அரசு மாற்றியுள்ளது.